எதிர்பார்க்கிறேன்
குறுஞ்செய்தியை உன்னிடமிருந்து எதிர்பார்க்கிறேன்-முடியாவிடில்
குறும்புன்னகை மட்டும் புரிந்துவிடு...
காதல் கடிதத்தை எதிர்பார்க்கிறேன்-முடியாவிடில்
கண்ஜாடை மட்டும் காட்டிவிடு...
பரிசுப் பொருட்களை எதிர்பார்க்கிறேன்-முடியாவிடில்
பாசம் மட்டும் பொழிந்துவிடு...
உன்னோடுவரும் ஊர்வலத்தை எதிர்பார்க்கிறேன்-முடியாவிடில்
உன்பின்னேவரும் பொடிநடைக்காவது அழைத்துவிடு...
எதிர்ப்புகள் மீறி எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிவிடு...
என்னை உனதாக்க முயற்சிகள் எடுத்துவிடு.,.