இதழ்தனை

முன்நின்ற மெய்யே நீ
என்னிடமாய் திரிவதற்கும்
பொன்னின்ற தவ்விடத்தில் நான்
கண்ணொன்று வைத்ததாலோ
பக்கச்சரிவினில் படர்ந்தவென்
விரல்தனை இறுகப்பிடித்தனையால்
உனக்குள்ளே உருகி வடிந்தேனடி
உடையிலாவுன் விழிதனில்
ஒற்றையாய் நானிருக்க - என்
கன்னத்தில் கரையிட்டவுன்
இதழ்தனை கவ்விப்பிடித்தேனடி.

எழுதியவர் : அ. சார்லி கிருபாகரன் (10-Jun-15, 12:21 pm)
பார்வை : 94

மேலே