கருவிழினேர் நின்று

கார்குழல் துழாவி
கருவிழினேர் நின்று
இருகை வளைவினுக்குள்
இடைவெளியே யில்லாதபடி
காலம் கடத்திவிட்டு
காதல்தனை கட்டவிழ்க்க
போரிட்ட இடம்போல்
போர்வையும் ஒப்பிவிட
பார்வையிடாவுன் பருவங்களை நான்
பத்திரமாய் பருகிடவே
கட்டியணைத்தபடி என்னுள்
பரவியே கிடந்தாயடி

எழுதியவர் : அ. சார்லி கிருபாகரன் (10-Jun-15, 12:23 pm)
பார்வை : 91

மேலே