காகங்கள்
கவிதைகளின் சொந்தக்காரன் அவன்
தொலையாத ஒன்றை
காற்றில் தொலைத்ததாய்
எண்ணி...???
தேட விட்டிருக்கிறான்
அவற்றை
கொஞ்சம் சிறகுகள் சேர்த்து
நிறையவே மை தடவி..
தொலையாத ஒன்றை
தொலைந்ததாய் எண்ணி...
அவைகளும்
தொலைந்து தொலைந்து
தொலை தூரம் வரை தேடுவதாய்
அலைந்து திரிந்து
அங்கலாய்த்து கொண்டிருக்கின்றன ..?!
கண்டதை எல்லாம்
தின்று தீர்த்தபடி
தின்ற பின்
மிச்சத்தை....
அவன் தலையில்
எச்சமாய் ..!! இட்டுப்
பறக்கின்றன
காகங்கள்
கா ...கா ... என்றபடி..!!!!