கல்லறை கண்ணீர் பூக்கள்
கைவலிக்க எழுதிய போது
பார்க்கவில்லை பதிப்பகத்தார்
பதிப்பித்து வெளியிட்டபின்
படிக்க ஆளில்லை
கல்லறைக்குப் போய் சேர்ந்த பின்
"சாவுக்குப் பின் பரிசு " என்று
வந்து சேர்ந்தனர் பரிசகத்தார் !
___கவின் சாரலன்
தூண்டிய கவிதை கல்லறைப் பூக்கள் by. ..காளியப்பன் எசேக்கியேல்
சாவுக்குப் பின் __POSTHUMOUS