உன்னை உணர்ந்திடு

வேண்டுவதை விட்டுவிட்டு
வேண்டாததை எல்லாம் தேடி
அலைகிறது மனம்..!

மரணம் நம்மை அடையும் முன்..
மனம் அடைய நினைப்பதென்னவோ..
அதிகபடியான ஆசையைத்தான்..!

ஆடி அடங்கி..
ஓடு தேய்ந்து..
காடு நோக்கிய பயணத்தின் முன்பு..
நம்மை நாம் அறிந்து..
அவனை அடைய அலைவதெதற்கு..!

இந்த நொடி போதும்..
துரத்திகொள்வோம்
இதுவரை நாம் செய்த தீமை
எனும் பாவத்தை..
தேடி அலைவோம் நன்மை எனும்
மேகத்தை..

உடலை விட்டு உயிர் பிரிந்து..
ஆன்மா அடையும் அவதி..
இன்பமடைய..!!!

உன்னை உணர்ந்து..
அவனை நாடு..

ஓம் நமசிவாய..!!!

எழுதியவர் : சதுர்த்தி (12-Jun-15, 10:30 pm)
Tanglish : unnai unarnthidu
பார்வை : 221

மேலே