மதுக் கடை ஏன்
மதுக் கடை தேவையா?
மளிகை க் கடையில்
துணி க்கடையில்
உணவகத்தில்
கூட்டம் இருக்கும்
எப்போதும் மக்களின் சுவைக்கேற்ப
அதுபோல
பள்ளிக்கூடத்தில்
கல்லூரி யில்
கூட்டமிருக்கும்
மாணவர்கள் சுவைக்கேற்ப
இவற்றின் சுவையைக் கெடுக்க
மதுக் கடைகள் ஏன்?
பணம் கொழிக்கும் இவைகள்
பிணம் பார்த்து ரசிக்கவா?
அவர்கள் வாழ்க்கையின்
தள்ளா ட்டத்தை ரசிக்கவா?
தாய்ப்பாலுக்கு குழந்தை அழ
போத வில்லை என்று
புட்டிப்பாலுக்கு ஏங்குகிறது.
தாய் கணவன் முகம் பார்க்க
கணவன் நெஞ்சம் பதருமோ ?அன்றி
பதறாமல் நிறைக்குமோ ?வயிற்றை
அந்த எமன் புட்டியில்....
நாட்டம் கொண்ட மனிதர்கள்
கண் சிவந்து வாய் குளறி
புத்திக் கெட்டு சொத்துங்கெட்டு
நாறிப் போகும் நிலை இன்று...
விளம்பரங்கள் வேறு
ஒவ்வொரு நாளிதழ் செய்தி யில்
சுவர்களில்
சினிமா ஓடு திரையில்
காட்சியாக தினம் தினம்....
தள்ளாட்டமில்லா பேருந்து
வண்டியில் தள்ளா ட்டத்தோடும்
வண்டி ஓட்டும் பொழுதும்
அழுத்தமும் சக்கரையும் ஏற
மருத்துவரின் ஆலோசனை மீறி
செவி சாய்த்தும் செவிடாகி...
விட்டுத் தொலை போதும்
பட்ட கஷ்டம் விட்டதென்று
புதுப் பெண் வாழாமல் வாழ்க்கை
ஒவ்வொரு தொடரிலும் இழந்தும்
ஒவ்வொரு வீட்டுக் கதவுகளில்
கதா நாயகியின் அழுகையோடு
பார்த்து சலித்து நொந்து வலியில்
போதுமடா சாமி என்று தற்கொலையில்
ஒவ்வொரு கதவுகளும்..
பெண்கள் கைக்குழந்தைகளோடு
கடனும் வட்டியும் பிரசவ வலியாய்
ஆளாத் துயரில் தன்மானம் காக்க
தன்னையே கொளுத்திக் கொண்டும்..
இப்படி ஒரு வாழ்க்கையா?
ஒருபுறம் கசாப் புக்கடையில்
மா ஆ பெடைகளின் கதறல் ஒலி
இனமே அழியும் நிலை
ஆறறிவு கேட்டும் கெட்டும் செத்தும்
குட்டிச்சுவராய் வாழ்க்கை
ஐந்தறிவின் சாபத்தில் ஒருபுறம்
அரசாளும் ஜாம்பவான்கள்
வெட்டவெளி ராஜ்ஜியத்தில்
எதை எத்தனை சாதனை படைத்து
என்ன சாதிக்க?
யாருமில்லா உலகத்தில்...
யாருக்கும் கருணை உண்டோ?
புத்தரைபோல்
மஹாத்மா போல்
அன்னை தெரசா போல்
கர்மவீரர் போல்...!
I support nanthini
Nandri saravanaa