கரகமேந்திய கரங்களில் - தேன்மொழியன்

கரகமேந்திய கரங்களில் ....
~~~~~~~~~~~~~~~~~~~~~
பாசிப் படர்ந்த வரப்புகள்
பாறை வெப்பத்தில் வெடித்தது ..
எட்டி மரத்தின் காய்களே
எத்தனை உயிரைப் பறிப்பது ...
பொன்னாடைப் போர்த்தியே
ஊர் முழுக்க நகர்கிறாள் ..
ஏரிக் கரையில் எழுந்தவள்
வாடகை நீரில் குளிக்கிறாள் ..
கரகம் ஏந்திய கரத்திலும்
வறுமை ஊறிய வியர்வைகள் ...
தேரினை சுமந்த தோள்களில்
எலும்பின் உரசல் எதிர்காலம் ..
தீ பந்தம் எரிக்கும் திருவிழா
உழவை மீட்டும் உயிர் விழா ..
எங்க வயித்துகே வழியில்லை
எந்த சாமிக்கு என்னத்த செய்ய ..?
- தேன்மொழியன்