பத்திரிக்கையாளர் உயிருடன் எரித்துக் கொலைஉபி மந்திரியின் வெறிச் செயல்கேட்டால் அதுதான் விதிஇயற்கையின் சட்டம் என்ற விளக்கம் வேறு
பத்திரிக்கையாளர் உயிருடன் எரித்துக் கொலை....உ.பி. மந்திரியின் வெறிச் செயல்.....கேட்டால் அதுதான் விதி....இயற்கையின் சட்டம் என்ற விளக்கம் வேறு.......
உ.பி. / ம.பி. / இ.பி. / ஆ.பி. / க.பி. என்று எந்த மாநிலம் திரும்பினாலும் மூட நம்பிக்கை - காட்டுமிராண்டித் தனம் - ரவுடிசம் - கட்டப்பஞ்சாயத்து...கொலை என்று கொடி கட்டிப்பறக்கின்றன எனலாமா...?
சட்டிஸ்கர், பீகார், ஒடியா என்று எந்த மாநிலமும் தப்பவில்லை...மேற்கண்ட கொடும் செயலுக்கு....
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பத்திரிகையாளர் ஒருவர் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம், இயற்கையின் விதிப்படி நடந்தது என்று அம்மாநில தோட்டக்கலைத் துறை அமைச்சர் பரஸ் நாத் யாதவ் கூறியுள்ளார்....
படுகாயம் அடைந்த பத்திரிக்கையாளர் என்னை அடித்து / உதைத்து இருக்கலாம். உயிரோடு எரித்ததற்காக மிகவும் வருத்தமடைகிறேன் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.....
பத்திரிகையாளர் எரிப்பு சம்பவத்தில் உத்தரப்பிரதேச அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பரஸ், சில நிகழ்வுகள் முன்கூட்டியே தீர்மானிக்கப்படுகிறது. அதுதான் விதி. அது இயற்கையின் சட்டம் என்று கூறியுள்ளார்.
தமிழ் நாட்டில் இவ்வாறு கூற முடியுமா என்ன....? கொலைவெறியில்....மூட நம்பிக்கையின் உச்சத்தில் இருக்கிறது பெரும்பான்மை இந்தியா என்று கூறலாமா....?
- சங்கிலிக்கருப்பு -