மன்னிப்பாயா....
இணையதளச் சோலையில்
எழுத்து என்னும் தென்றலில்
எழுதிய கவிதைக்கு வந்த - உன்
வாசமான மலர்களின் அணிவகுப்பில்
நான் குறையேதும் காணவில்லை
தோழனே....
மனச் சுமையுடன் நீ வீற்றிருப்பது
மனதை நெருடுகிறது...
தோணவில்லை எனக்கு - என்
வார்த்தைகள் உன்னைச் சுடுமென்று
தொண்டை வறள்கிறது!
நாக்கு உலர்கிறது..!
உன் மௌனம் வலிக்கிறது..!
வேஷமில்லை என்னிடம்
பாசமுண்டு உன்னிடம்
தன்மையில்லை என்னிடம்
தன்னம்பிக்கையுண்டு உன்னிடம்
உண்மைகளும் உணர்வுகளும்
இருவரிடமே உண்டென்பதை
ஏற்றுத்தான் ஆகவேண்டும்
என் இனிய தோழனே!
ரணங்கள் என்றும் ஆறாது
ஆனால்
மனங்கள் முயன்றால் மறக்கலாம்
மனக்கசப்பை மறப்போம்
மறுபடியும் நட்பில் கைகோர்ப்போம்
வாசமடைந்து வளம்பெறுவோம்
என்
எழுத்துக்களை சேர்த்து வை
வரிகளை வடிவமாக்கு...
பிழையோடு பிறக்கும் என்
கவிதைகள் எல்லாம் உன்
பார்வை பட்டே பிழைக்கட்டும்...