என் தோழனுக்கு......

நாம் பகிரிந்து கொண்டவை
வெறும் வாக்கியங்கள் அல்ல
வாழ்கை...
உன்னை வெறும் தோழனாய் கண்டிருந்தால்
பிரியும் பொது சம்பிரதாய கண்ணீர் வடித்திருபேன்
உன்னை வெறு சகோதரனாய் கண்டிருந்தால்
பிரியும் பொது உரிமையுடன் தலை கோதியிருபேன்
என் பிரதியாய் உணர்ந்ததால்
உயிர் வலிக்க பிரிந்தேன்
அன்று வாழ்க்கையின் பல ரகசியங்களை
உணர்ந்தான் புத்தன் போதி மரத்தின் அடிவாரத்தில்
நாம் உணர்ந்தோம் நம் உணவகத்தில்
இரவு பதினோரு மணிக்குமேல் காதலையும் காமத்தையும் மட்டுமே சந்தித்து சலித்து போன நிலவு முதல் முறையாய்
நட்பை சந்தித்தது....
பேசி பேசியே வாழ்க்கையை தொலைத்தவர் பலர்
நாம் மட்டும் தான் பேசி பகரிந்து வாழ்கையை அறிந்தவர்
உன் கோபம் பாரதி கண்ட கோபம்
உன் சிந்தனை தெளிந்த நீரோடை
உன் எழுத்து ஊன்றுகோல்
உன் ஓவியம் ஓவொன்றும் ஒரு காவியம்
எல்லோரும் என் கோபத்தை சீண்டி பார்க்க
நீ மட்டும் தான்
என் சிரிப்பை சீண்டி பார்த்தாய்
நீயும் நானும் நடக்கையில்
காட்சிகள் ஒன்றாயின
எண்ணங்கள் கைகோர்த்தன
சமுதாயம் கழுவபட்டது
என்னை கவி வடிக்க வைத்த கவியே
என் தமிழும் என் கவியும் உனக்கு
சமர்ப்பணம்..........