20 - 30 வருடங்களில் வேற்று கிரக வாசிகளை கண்டுபிடித்து விடுவோம் நாசா

20 - 30 வருடங்களில் வேற்று கிரக வாசிகளை கண்டுபிடித்து விடுவோம் ....நாசா..!

முன்னாள் விண்வெளி வீரரும் நாசா வின் ஆராய்ச்சி மைய முக்கியமான நிர்வாகியுமான சார்லஸ் போல்டன் கூறியதாவது.....

வேற்றுக்கிரக வாசிகளை மிக விரைவில் தொடர்புகொள்வோம்.

சூரிய குடும்பத்தில் இல்லாவிடினும் அண்மையில் உள்ள கலெக்சிகளில் உயிரினங்கள் வாழ்வதற்கான சூழல் அதிகம் உள்ளது.

2018 - ல் செயல்பட நிறுவப்படடுள்ள ஏலியன் எக்ஸிட் - ன் உதவியுடன் அடுத்த 20 - 30 ஆண்டுகளுக்குள் நிச்சயம் வேற்றுக் கிரகவாசிகளை அடையாளம் காண முடியும் என்று கூறினார்.

அப்ப ரைட்டு...அங்கே போயும்...ஆயில் மற்றும் ஏராளமான கனிம வளங்களை கொள்ளை அடிக்கப்போறாங்கே.....

அய்யா...வேற்று கிரகவாசிகளே...தங்களின் மேலான கவனத்திற்கு.....

இப்ப இந்த உலகத்தில் உள்ளவங்கே அனைவருமே களவாணிப்பயல்களாக / மனித உயிர்களை மானா யினா றுனா ரேஞ்சுக்கு மதிச்சுக்கிட்டு இருக்காங்கே....

அதோடு மட்டுமல்ல....குண்டுகளாக வீசி கொத்துகொத்தாக மனித உயிர்களை கொன்று அழித்துக் கொண்டு இருக்காங்கே....

சில லட்சம் பேர் சொகுசாக இருப்பதற்கு பல நூற்றுக் கணக்கான கோடிகளில் உள்ள மக்களை ஏமாற்றியும் / வஞ்சித்தும் / மோசடியும் செய்துகிட்டு இருக்காங்கே.....

எப்படியாவது இந்த மனித குல விரோதிகளிடம் இருந்து கோடிக்கணக்கான மக்களையும் இந்த புவிப்பந்தின் வளங்களையும் காப்பாற்றுங்கள்.....என்று கோரிக்கை விடுக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்..

- சங்கிலிக்கருப்பு -

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (23-Jun-15, 12:50 pm)
பார்வை : 217

சிறந்த கட்டுரைகள்

மேலே