நிற்காத மழை

பூவும் இன்று மழையில் நனைத்து நின்றது
சாலையோரம் சாமந்தி பூ இவள்
வாசனை மட்டும் என்னை நனைத்து சென்றது

என் இரவு பொழுதை எழுப்பி விட்ட இவளை
கண்ணில் கனவுகளாக
சுமக்க துடிக்கும் இந்த மனது

மனது சுமக்கும் இவளை ஆனால் பாரம் தங்காது நிற்கும் இந்த இதயம்.
காதல் சுமந்த நாளில் இவன் கால்கள் மட்டும் வலித்து நிற்கும்.
மழையில் அவளை காணாத இந்த நாளில்
இவன் கண்களில் கண்ணீர் துளி துளியாக பெருகி நிற்கும்.

எழுதியவர் : (23-Jun-15, 4:18 pm)
Tanglish : nirkaatha mazhai
பார்வை : 66

மேலே