ஊறிய காகிதம் உருகிய காதல்

யாருக்கும் சொல்லியிருக்காத
கதை சொல்லக் கேட்கையில் பாட்டிகள்
சொல்லத் துவங்குவது
அவர்களின் காதல் கதைகளாயிருக்கும்...

தாத்தா சாமானியன் என்றாலும்
கதைப்படி ராஜகுமாரன்.... அனுப்பிய
ஓலையென்பது... யார் மூலமாகவோ
பாட்டியிடம் வந்திருந்த
முனை நசுங்கிய கடிதங்கள்....!!

கடித முனைகள்
சிதைந்திருந்ததன் காரணம்
உள்ளங்கை வியர்வைகளோ
குடத்தடி ஒழுகல்களோ
நாட்பட்ட இருப்புகளோ.. என இல்லாது
போயிருந்த தாத்தாவிற்கே
வெளிச்சம்...

இருக்கும் பாட்டிக்கு இன்னும்
நினைவிருக்கிறது... ஏழுமுறை
திருப்பியனுப்பியதாகச்
சொல்லிக்கொண்டிருக்கிறாள்....

கடிதம் பகிர்வதற்கு
இத்தனை பிரயத்தனங்களா.... என்று
வியந்து கெக்கலிக்க.....

ஆண்நண்பன் குறுஞ்செய்திகளில்
அனுப்பியிருந்த
முத்தப்பொம்மைகளைப் போல
எளிதாய் இருந்திருக்கவில்லை
அந்நாட்களில்
காதலனாய் காதல் மொழிந்துவிடுவது ................!

எழுதியவர் : கட்டாரி (26-Jun-15, 7:33 am)
பார்வை : 162

மேலே