கவனம் குழந்தைகள் கவனித்துக் கொண்டுதான்
திரும்பி விட்டார்கள்
பள்ளியிலிருந்து பிள்ளைகள்
பேரப் பிள்ளைகள்;
பசியாற சாதமுடன்
முட்டைப் பொரியல் அல்லது
நூடுல்ஸ்;
தாத்தாவிற்கும் வேண்டும், தா! என்று
செல்லங்களிடம் கேட்பேன் வேண்டுமென்றே!
தரமாட்டார்கள்;
மீண்டும் மீண்டும் கேட்பேன்,
என்னிடம் தயங்கியுபடி கேட்டார்கள்
ஒரு கேள்வி!
இரவினில் நீங்கள் அருந்தும்
பானத்தை 'என்றாவது' கேட்டோமா
நாங்கள்?
கவனம்!!
குழந்தைகள் நம்மையும்
கவனித்துக் கொண்டுதான்...
இருக்கிறார்கள்.