மர்ம தொழில்

சவங்களின் உயிர் புணர்வு....
நின் மர்ம வித்தை....

மண்ணின் மேல் எங்களை செறுகி,
கூடங்களும்,கூட்டங்களுமாய் எம்மை வடித்தாய்...

காற்றை முடிந்தாய்......
அதை கசக்கியே உயிர் பிழைத்து வந்தோம்...
அதை தருணமும் ஜபித்தே சாவை நிறுத்தி நின்றோம்...

சோற்றை முடிந்தாய்...
உடலிற்கு உரம் சேர்த்தோம்....
சுவை பட பாங்கோடு சேர்த்தோம்....

கண்ணை முடிந்தாய்....
காட்ச்சி புணைந்தோம்,
காட்ச்சியிலே கனவு பல கடைந்தோம்...

நன்று...நன்று...

இனிது...இனிது...

நின் மர்மதொழில் இனிது...

இருந்தும் நல் அறிவை முடிய உணக்கென்ன தடை...

மண்ணெங்கும் மடையர்களின் சதை...

இப்படைப்பை எவ்விதம் ஏற்க...

முடப்பட்ட அறிவிலே எனக்கு வாழ்வொன்றும் வேண்டா...

எம்மோடுச் சாவை முடிந்துபோ.....

எழுதியவர் : சிவசங்கர்.சி (30-Jun-15, 11:11 am)
Tanglish : marma tholil
பார்வை : 78

மேலே