தலைக்கவசம் கவிஞர் இரா இரவி
தலைக்கவசம் ! கவிஞர் இரா .இரவி !
விற்றுத் தீர்ந்து விட்டன
மகிழ்ச்சியில் நிறுவனங்கள்
தலைக்கவசம் !
ஒருவரின் தீர்ப்பு
கோடிப்பேருக்குத் தொல்லை
தலைக்கவசம் !
வேண்டா வெறுப்பாக
அணிபவரே அதிகம்
தலைக்கவசம் !
வேறு வழியின்றி
விரக்தியோடு சிலர்
தலைக்கவசம் !
முழிக்கின்றனர்
முதியோர்கள்
தலைக்கவசம் !
தலையில் அரித்தாலும்
சொறிய முடிவதில்லை
தலைக்கவசம் !
அல்லல் படுகின்றனர்
காது மந்தமானவர்கள்
தலைக்கவசம் !
தலைவலி சளி
நோய்கள் தொடங்கின
தலைக்கவசம் !
பயமின்றி பயணிக்கின்றனர்
காதலர்கள்
தலைக்கவசம் !
பெற்ற குழந்தையைத்
தூக்காதவரும் தூக்குகின்றார்
தலைக்கவசம் !
சிரமம் உள்ளது
திரும்பிப் பார்ப்பதில்
தலைக்கவசம் !
வந்தது வெறுப்பு
வாகனத்தின் மீது
தலைக்கவசம் !
பயந்து சிலர்
நடராசாவாகி விட்டனர்
தலைக்கவசம் !
வந்தது மதிப்பு
மிதி வண்டிக்கு
தலைக்கவசம் !
நல்ல வாய்ப்பானது
நகைத் திருடர்களுக்கு
தலைக்கவசம் !
ஒரு சில உயிர்கள்
காத்திடக் காரணம்
தலைக்கவசம் !

