யார் அவள்

அவள் வியர்வை வாசம்
துர்நாற்றமாய் உணர்ந்ததில்லை
அவள் விரல் பிடித்து நடந்தால்
தொலைவு கூட தூரம் இல்லை
அவள் குரல் கேட்காமல்
என் கைபேசியின் சினுங்கல் அடங்கியதில்லை
அவள் சேலையில் உறங்காமல்
தூக்கம் கூட எனை நெருங்குவதில்லை
அவள் தோள் சாயும் நேரம்
தோல்வியும் எனை தோற்கடிப்பதில்லை
யார் அந்த அவளோ..
என் பாட்டி பெற்ற மகளோ..
அவளே என் தாயோ..
அதை நீ அறிவாயோ..

எழுதியவர் : deeku (5-Jul-15, 12:55 pm)
Tanglish : yaar aval
பார்வை : 237

மேலே