கடவுளிடம் அகப்பட்டுக்கொண்டவர்கள்

கைகால் ஊனம்
மனப்பிறழ் ஊனம்
பால் நிலை ஊனம்
பேச்சில் ஊனம்
கேட்டலில் ஊனம்
பார்வையில் ஊனம்
என எந்தவொன்றையும்
எனக்குள் திணிக்க
கடவுளுக்கு வாய்ப்புக் கொடுக்காமல்
பிறந்தும், இதுநாள் வரை
வளர்ந்தும் விட்டேன்

சாமர்த்தியமின்றி,
கடவுளிடம் அகப்பட்டுக்கொண்ட
அவர்களுக்கு என்ன செய்யப் போகிறேன்..?

எழுதியவர் : பட்டினத்தார் (6-Jul-15, 11:09 am)
பார்வை : 119

மேலே