மனங்கவர் காதலி - 9

ஏனடிக் கண்மணி,
என்னுடன் கோபமோ?!
தீயதைத் தீண்டற் போல்
நான் தொடக் கூசினாய்!

பாரடி என்முகம்,
எத்தனை பாரமாய்?!
சாறது நீங்கின
சக்கையாய் நிற்கிறேன்!

வேரது அன்பிற்கு
மேலுடை (தோல்) இல்லைநல்
பாறைக்கு நற்குணம்,
நீர்ச்சுனை பெய்தலே!

தேன்சுளைத் தீங்கனிக்
கண்மணி, காணடி..
என்மனம் பாறைதான்,
அன்பது பொங்குதே!!


*************************************
அன்புடன்,
சுந்தரேசன் புருஷோத்தமன்

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (6-Jul-15, 5:38 pm)
பார்வை : 180

மேலே