மௌன மொழி நீயே

என் இதழில் அதன் விளிம்-
பில் உன்னுமிழ் நனைத்து
வருடும் சுகங்கள் நீயும்
கானா உனதுத தோடு

பதிக்கும் முத்தங்களில்
தேசமொன்று நேசமொன்று
என்னில் ஒன்று எண்ணி-
நின்று சூழ்ந்திடும் பந்தங்கள்

தூவிய மகரந்தப் புன்னகை-
இல் சங்கமித்த முல்லை
நானே அதை அனுப்பி வைத்த
பூவும் நீயே

எழுத்துகளும் கதைத்தலும்
மொழி தாங்கி நிற்க
என் இதயம் தாங்கிய
மௌன மொழி நீயே

எழுதியவர் : குறிஞ்சிவேலன் தமிழகரன் (7-Jul-15, 12:31 pm)
Tanglish : mouna mozhi neeye
பார்வை : 116

மேலே