தென்றலே எச்சரிக்கை

என்னவளை போல் என்
தலைக்கோதும் தென்றலே.!

என்னை கட்டித்தழுவி
செல்லாதே.!

என்னை சுற்றி வந்து என்மீது
உரிமை கொள்ளாதே.!

உன்னை சுவாசக்காற்றாய்
உள்ளிழுத்து கரைத்து விடுவாள்
என் குழலழகி...

தென்றலே எச்சரிக்கை.!!

எழுதியவர் : பார்த்திப மணி (7-Jul-15, 3:21 pm)
பார்வை : 151

மேலே