ஒப்புதல் வாக்குமூலம்

2011 ல் புதுக் கவிதை

காதலி, காவலர்க்கு (Police) நேர்,
காதலிக்கும் காவலர்க்கும் கவனம் ஒன்றே!
சந்தேகம்;

என்ன குற்றம் செய்தேன், இறைவா?
குற்றம் ஏதும் செய்யவில்லை!

ஆதாரங்கள் இருவரிடமும் இருந்தாலும்;
தேவை, ஒன்றே ஒன்று!
அதுதான்...
என் ஒப்புதல் வாக்குமூலம்!!

2015 ல் மரபுக் கவிதை

ஒப்புதல் வாக்குமூலம் - பல விகற்ப பஃறொடை சிலேடை வெண்பா

காதலிக்கு காதலன்மேல், காவலர்க்கு கள்வனின்மேல்
பேதமின்றி சந்தேகம் தீராதே – ஏதமில்லை
என்றே நிரூபிக்க வேண்டும், இருவரும்
நன்றான ஒப்புதல் வாக்குமூலம் தந்துவிட்டால்
காதலியும், காவலரும் நேர்!

Ref:
Women are like the police.
They can have all the evidence in the world
and they still want a confession. - Chris Rock,

Quotable Quotes from Reader's Digest, February 2008

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-Jul-15, 8:29 pm)
பார்வை : 74

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே