நட்பே போய் விடு
உனக்காக நான் என்னை மாற்றினேன்
உன் ஒரு சொல் வார்த்தை கேட்டே
நீ
உனக்காகவே என்னை மாற்றினாய்
என் வார்த்தை ஒன்றையும் கேளாமல்
அவன் இல்லாமல் என்னிடம் வந்தாய்
அறியாமல் சிரித்தேன் அழகாக
அறிந்தபோது மரித்தே போனேன்
என்னுள் நானே மெதுவாக
புரியாத காரணம் சொல்லி பிரிந்து போனாய்
உன் நோக்கம் அறியா அறிவிலி நான் ஆனேன்
உந்தன் நினைவுகள் தந்த சுகங்கள் போதும்
நடிப்பெனினும் என்னிடம் நட்பாய் இருந்ததற்கு
நல் வாழ்வு உனக்கமைய என்றும் வாழ்த்துகிறேன்
நன்றி தோழியே
சில காலம் தோள் கொடுத்து
தேள் போல் வார்த்தைகளால் கொட்டியதற்கு
என்றும் மறவேன் உன்னை
கிடைத்த முதலும் கடைசியுமான தோழி நீ.....
---------- சாரு சரண் CJ