நம்ம பள்ளிக்கூடப் பாட்டி

ஊரான் பிள்ளைகளின்
பாட்டியொருத்தி
பள்ளிக்கூட மரத்தடியில்
கூறுகட்டி வாழ்கிறாள்
திண்பண்டங்களோடு…
குழந்தைகள் நீட்டிய கைகளில்
தீனியை வைக்கவே
உள்ளங்கைத் துட்டினை அகற்றித்
தன் பக்கம் வைப்பவள்,
குழந்தையேதும் வெறுங்கையொடு
திரும்பிடக் கூடாதென்றே…
தன் தாகத்திலும்,
புளிப்பு மிட்டாய் ஒன்றைக் கூட
வாயில் இட்டாளில்லை,
திகட்டத் திகட்டத்
தீராக் குழந்தைத் தாகத்தோடு கிடக்கும்
கிளவி அவள்..!

எழுதியவர் : பட்டினத்தார் (11-Jul-15, 7:16 am)
பார்வை : 91

மேலே