காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து

பூவாய் மலர்ந்த பெண்ணே ,நீ அரும்பாய் முளைத்த நாளிதுவோ ,
புதியதாய் உந்தன் இதயம் இறைவன் கிள்ளித் துடித்த நாளிதுவோ ,
உந்தன் அழுகை கண்டு உன் அன்னை சிரித்த நாளிதுவோ ,
பிறகுன் சின்னச் சிரிப்பை கண்டு உன் தந்தை அழுத நாளிதுவோ ,
இவை அனைத்தும் இல்லையென்றால் நீ என்னவள் ஆகிடநேரிடுமோ ,
உந்தன் உள்ளம் மகிழ ,இனி குவியட்டும் வாழ்த்துக்கடலே ,
அதில் இது உன்னவன் வரைந்த மடலே .

விளக்கம் :
இரண்டாம் வரி : இந்த உலகில் எந்த உயிர் துடிக்க வேண்டும் என்றாலும் அதை யாராவது தீண்டி இருக்க வேண்டும் , அனால் உன் இத்தனை காலமாய் உன் இதயம் துடிக்கிறதே அதை யார்தான் தீண்டியது .

மூன்றாம் வரி: இடு டாக்டர் அப்துல் கலாம் வரிகளில்,என்னை பாதித்தது.. .

எழுதியவர் : (12-Jul-15, 11:02 am)
பார்வை : 1049

மேலே