குழந்தை

அழகான காலை
அல்லி பூக்கும் வேலை
இந்த உலகோடு உறவுகொள்ள
தன வரவேற்பிற்கு தானே இசைஅமைத்துக்கொண்டு
ஒரு மங்கை மலர்
மழலைவடிவில்
அன்னை மடியில்
தாமரைமேலுள்ள நீர்துளிப்போல தவழ்ந்தது
அன்னையின் மகிழ்ச்சியில்
தந்தையின் ஆர்பரிப்பில்
அவள் மாளிகையோ அலைபோல் அசைந்தாடியது****************