ஒரே ஒரு வைரமுத்து

ஒரே ஒரு வைரமுத்து

என் பேனா முனையும்
கணினி விசைப்பலகையும்
கவிதையை சிந்தித்தது
உன் கவிதைகளின்
தாக்கத்தினால்தான்

என் தமிழின் கம்பீரம்
நீயும் உன் கவிதைககளும்
எனக்குள் இட்ட விதை

என் கவிதை தாகத்திற்கு
உன் கவிதை இளநீர்

சினிமா பாடல்களிலும்
கற்பு நெறி காத்தது
உன் கவிதை

உன் கவிதைகளுடனான
என் பயணம்
நிலக்கரி வைரமாவதை
படம் பிடித்ததுக் காட்டியது

என் காலத்து தமிழ் கவிதையின்
அடையாளம் நீ

கள்ளிக்காட்டிலிருந்து
கணினி உலகிற்கு
கவிதைப் பயணம் செய்தவன் நீ

கவிதையால் வாழ்த்துக்கள்
சொல்லுமளவிற்கு
நான் பெரிய கவிஞன் அல்ல
ஆனாலும் வாழ்த்துக்கள் சொல்லாமல்
என் வரிகள் போகாது

வையத்தில் கிடைக்கலாம் ஆயிரக்கணக்கான
வைரங்களும் முத்துக்களும்
ஆனால் ஒரேயொரு வைரமுத்துதான்

பிறந்த நாள் வாழ்த்துக்கள் கவியரசே!

என் கவிதைக் குளத்தில்
முதல் கல்லெறிந்தவன் நீ ...!

எழுதியவர் : சூரியகாந்தி (14-Jul-15, 11:32 am)
Tanglish : ore oru vairamutthu
பார்வை : 246

மேலே