பெருந்தலைவர் உயிர்தெழுந்தால்

பெருந்தலைவர் உயிர்தெழுந்தால்


மயிர் அடர்ந்து நரை
தட்டிப்போய்
பூலை மண்டிக் கிடந்த கிழவியின் முந்தானைக்குள்
அவருக்காக வண்ண லேஸ் பாக்கெட்டுகளிடமிருந்து தப்பித்த
கடலைமிட்டாய் காத்திருக்கும்...


அந்த காமாட்சி பள்ளியின் படிக்கட்டுகளில் இன்று ஏறியிருந்தால்
எந்திரயுகத்தின் ஏதோ மூலையில்
கைகட்டி பணிசெய்ய பிஞ்சுக்கால்களில்
பூட்சு திணித்து
பயிற்சி துவங்கியிருக்கும்...



இளைஞனாக வளர்ந்திருந்தால்
இந்தியாவின்
எசம் (அம்ப,அத)ஆனி களுக்கு எதிராக
கொடிதூக்கி
காந்தியிஸ்டு என்று குற்றம்
சுமத்தப்பட்டிருப்பார்...


முதலமைச்சராயிருந்தால்
இராணிபேட்டையின் தோல்கழிவால்
இறந்த தொழிலாளிகளின்
பிணவாடை
கண்மாய்கள்,ஆறுகளில் குவிந்துகிடக்கும் குப்பை நாத்தமும், மருத்துவக்கழிவும்
அவரை
தூங்கவிடாமல்
குடைந்திருக்கும்...



அந்த தொழிற்புரட்சி தூக்கியெறிந்து
தீயிட்டிருப்பார்...


நர்மதையின்
வலிபொருந்திய கண்ணீரின் நெடிக்குப்பின்
கட்டாயம் எந்த அணைக்கட்டுகளுக்காகவும்
கையொப்பமிட்டிருக்கமாட்டார்...


காந்தியப் பொருளாதாரத்தையும் கதரையும்
கடைப்பிடத்தால்
இன்று தனக்காக
உள்ளாடை கூட
வாங்கயிருக்க மாட்டார்....


இத்தனைக்குப்பின்னும்
எவனாவது
மீத்தேன்,கெயில்,கூடங்குளமுனு வந்தால்
மிரட்டிதான்
அனுப்பியிருப்பார்...



ஆனால் அரசியலில் எந்த பக்கமாக அவர் நின்றிருந்தாலும்
டூஜியோ,போபர்ஸோ, வியாபமோ
அவருக்கும் அடையாளமாகிப்போகும் கொடுமை
நிகழ்ந்திருக்கும்...


அவர் உண்மை

போங்கடா.!
பொளப்பத்தவனுகளா
காணிநிலம் போதுமுடா
எங்க மக்க கஞ்சிக்குனு
கலப்பைய
தூக்கீட்டு கெளம்பியிருப்பாரு...


யாருகண்டா..?
அதக்கூட..
ஏதாவது சட்டம் வந்தா
கையகப்படுத்தீருவாய்ங்க...

எழுதியவர் : செ.பூபதிராஜ் (14-Jul-15, 12:29 pm)
பார்வை : 92

மேலே