நிறம்
என்னிடம் பழகும் போது தெரியவில்லையா
என் அன்பு காதலனே...
என் நிறம் கருமை என்று...
இன்று உன் வீட்டில் நிறமான
பெண் தேடி அலைகிறார்கள் உனக்கு...
அவர்களுக்கு எப்படி தெரியும்
என் மனதின் நிறம்
நிறம் தான் உன் வாழ்கையை தீர்மானிகிறது
என் அன்பு காதலனே என் மனம் ஏன் உனக்கும்
கூட புரியவில்லையடா