எழுதக் கொஞ்சம்

நாளைய உலகின்
மிகப்பெரும் பணக்காரனாய்
என் மகனை
வளர்க்க வேண்டும் -
எந்த நோயுமின்றி ..!

***************************************

உயிர் 12
மெய் 18 -
சேர்ந்து 216..
காவலுக்கு 1...
எம் தமிழ்
பெருங் குடும்பம் !

***************************************

பொட்டில்லாத உன் நெற்றி
பூட்டுடைத்த புதுக் கவிதை ...!

************************************************

கலையாதிருக்கும் வரை
கனவும் நிஜமே ...!

***************************************

உனைத்தொடும் ஆசையில்
மேகம் உலகையே உய்விக்கிறது..!

*****************************************

எழுதியவர் : நிலாநேசி (25-Jul-15, 11:07 am)
சேர்த்தது : நிலாநேசி
Tanglish : ezhuthk konjam
பார்வை : 70

மேலே