உன் சுவடுகள்
![](https://eluthu.com/images/loading.gif)
அலையின் தடத்தை
நுரைகள் சொல்லும்
மலரின் தடத்தைத்
தென்றல் சொல்லும்
நதியின் தடத்தை
வயல்கள் சொல்லும்
மழையின் தடத்தை
மரங்கள் சொல்லும்
அருவியின் தடத்தை
அதன்ஓசை சொல்லும்
இசையின் தடத்தை
திசைதான் சொல்லும்
நிலவின் தடத்தை
இரவே சொல்லும்
காதலின் தடத்தை
கண்கள் சொல்லும்
இவை யெல்லாம்
சொல்லக் கேட்டேன் ..
வட்டநிலவே சொல்லிவிடு
வானம் விட்டென்
வாசல்ப் பக்கம் -
வந்து போனாயா ?!
நீ - வந்து போனாயா ?!