இனியும் வரதச்சனை அவசியமா
சிலை வடித்த சிற்பி கூட
தன் சிலையும் தந்து பணத்தையும் தருவதில்லை
உன் அணுவில் இருந்து வந்த மகளை
பணம் கொடுத்து அனுப்புகிறாயே
பாசம் என்றும்
கெளரவம் என்றும் பெயர் சொல்லி
ஊரார் முன் உன் பகட்டை காட்ட
வரதச்சனை அவசியமா?
உயிருக்கு சட்டையாய் உடல் இருக்க
அம்மன உடலை மறைத்திட மேல் சட்டை
அதற்கு மேல் ஒரு சட்டையாய்
நீ அணிந்து கொண்ட கெளரவம் இங்கு
துணியை துறந்தவன் துறவி ஆகிறான்
கெளரவம் துறந்து நீ மனிதன் ஆகலாம்
வரதச்சனை அவசியமா?
பாசம் தங்க சவரனில் இல்லை
நகை கடைகள் அதை விற்பதுமில்லை
இறப்பை கடந்த அன்பின் மகத்துவம்
அதை வெறும் பணத்தால் அளப்பவன்
உண்மையில் தோற்கிறான்
உன் மகளிடம் கொண்டது அன்பு என்றால்
வரதச்சனை அவசியமா ?
பெண் கேட்க பெண் கொடுக்கிறாள்
இதில் ஆணை சொல்லி குற்றமில்லை
சொத்தில் உனக்கும் உரிமை உண்டு
கேட்டு வாங்க சட்டம் உண்டு
தேவை ஒன்று வரும் நாளில்
உன் உரிமை கொண்டதை பெற்றுவிடு
வரதச்சனை அவசியமா ?
படித்துவிட்டதால் அறிஞன் என அர்த்தமில்லை
முன்னோர் சொன்ன அனைத்திலும் நன்மை இல்லை
கண்மூடிதனமாய் தொடர்வதை விடுத்து
உன்னில் இருந்தே எதிர்ப்பை துவக்கு
ஆணும் பெண்ணும் என்றும் சமமே
இனி வரதச்சனை என்பது அவசியமில்லை ....!!!