பாரத ரத்னா திரு அப்துல் கலாம் அவர்களுக்காக

பாரத ரத்னா திரு .அப்துல் கலாம் இழப்பை முன்னிட்டு தமிழக அரசிற்கும் , தமிழக மக்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வேண்டுகோள் .......
முதலில் தமிழக அரசிற்கு
தமிழகத்தின் மூலை முடுக்குகள் எல்லாம் திரு.கலாம் சிலை அமைக்க வேண்டும் .
தமிழகத்தில் திரு.கலாம் பெயரில் விண்வெளி ஆராய்ச்சி கூடம் அமைக்க வேண்டும் .
தமிழகத்தின் பிரதான சாலைகளுக்கும், தெருக்களுக்கும் திரு கலாம் பெயர் வைக்க பட வேண்டும் .
அடுத்து ஏவப்படும் ஏவுகணைக்கு திரு.கலாம் பெயரில் விடுவதற்கு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் .
அப்துல் கலாம் பிறந்த தினத்தை கலாம் ஜெயந்தி என்ற பெயரில் இந்தியா முழுவதும் பொது விடுமுறை தினமாக அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
இந்தியாவில் அனைத்து மாநில பாட புத்தகங்களிலும் திரு.கலாம் அவர்களின் வாழ்க்கை வரலாறை பாடமாக வைக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் .
திரு.அப்துல் கலாம் அவர்களுக்கு ராமேஸ்வரத்தில் மணிமண்டபம் அமைத்து அதில் உலகின் மிக உயரமான சிலைகளில் ஒன்றாக அப்துல் கலாமின் சிலையை அமைக்க வேண்டும் .
திரு.அப்துல் கலாம் பயன் படுத்திய அனைத்து பொருட்களையும் அருங்காட்சியத்தில் வைத்து போற்று பாது காக்க வேண்டும்.
திரு.கலாம் பெயரில் அரசு அறிவியல் ஆராய்ச்சி கல்லூரிகள் ஆரம்பித்து அதன் மூலம் தலை சிறந்த அறிவியல் ஆய்வாளர்களை உருவாக்க வேண்டும் .

தமிழக மக்களுக்காக
இனி நம் ஒவ்வொருவர் வீட்டிலும் திரு. கலாம் அவர்களின் படம் இருக்க வேண்டும் .
சாதி, மதம், மொழி,இனம் கடந்து நம் வீட்டில் பிறக்கும் குழந்தைகளுக்கு திரு.கலாம் அவர்களின் பெயரை சூட்டுவோம்.மேலும் வருங்கால சந்ததியரை திரு.கலாம் அவர்களின் கண்ட கனவு படி வளர்ப்போம் .

வாழ்க திரு.அப்துல் கலாம் புகழ் ! வளர்க திரு.கலாம் கனவு !
--------------வைரா

எழுதியவர் : வைரா (28-Jul-15, 4:16 pm)
சேர்த்தது : வைரமுத்து
பார்வை : 431

மேலே