மௌன கீதம்
அவள் பார்த்த பார்வையில்
பறிபோனது நெஞ்சம்.
எப்போதும் பேசும் விழிகள்
என்னுடன் மட்டும்
பேச மறுக்கும் உதடுகள்.
அனைவரிடமும்
தமிழ்மொழியில் பேசும் நீ
என்னுடன் மட்டும்
ஏன் மௌன மொழியில் பேசுகிறாய்?.
பேசும் விழிகளா யாரும் அறியா மொழிகளா?..
பித்தனாய் மாற்றிய விருது உனக்கே.
உன் அழகை! கண்டதும் ஆமை கூட்டினுள்
அடங்கியது போல அடங்கி போனேன்....ஏனடி!...
பேசுவது உனது விழிகளா? இல்லை
என் நெஞ்சை கீரிடும் உளிகளா?....
என்னுள் வலியை தந்தது
உனது விழிகள் தான் என்றாலும்
என் வாழ்கையில் புதிய வழியையும் காட்டுதடி...
தேசிய கீதத்தின் பொருளுணர்ந்த எனக்கு
உன் மௌன கீதத்தின் பொருளுணர
மனமோ காதல் அகராதியை தேடுதடி.
-கவிஞன்.ராஜ்பிரியன்.
(இவன் கவிஞனல்ல கவிஞனாக்கப்பட்டவன்)