இயற்கையே அஞ்சலி செலுத்த வா

காற்று கூட
அதன் சுவாசம்
நிறுத்தலாம்...!

மேகம் கூட
பூ மழை
தூவலாம்...!

சூரியன் கூட
ஒரு நிமிடம் கண்களை
மூடலாம்...!

பூமி கூட
கண்ணீரால் ஈரம்
காட்டலாம்...!

இயற்கையே,

மாமனிதர் மறைவிற்கு
அஞ்சலி செலுத்தலாம் வா...!!

விடை பெறுகிறார்
இன்று மண்ணுலக நாயகர்...!!

விண்ணுலகம் வியக்க
விடை கொடுப்போம்...!!

நாளைய சரித்திரம் பேச...!!!

எழுதியவர் : சகா (சலீம் கான்) (30-Jul-15, 7:13 am)
பார்வை : 773

மேலே