பெண் - உதயா
அவள்
கனவு தேசத்துடன்
வனத்தினில் வாழப் போவதாய் எண்ணி
அந்த
மலையின் சரிவினில்
வண்ண மலர்களாய் மலர்ந்து விட்டு
பொறாமை
எண்ணம் கொண்ட வஞ்சப் புயலால்
வேரோடு சாய்க்கப்பட்டாலும்
அன்பு
உள்ளம் கொண்ட
மாசற்ற மாரியால் சுமந்து செல்லப்பட்டு
இன்னல்
நிறைந்த ஆழியில்
தோணியாய் அவதாரமெடுத்து
வாழ்கையாகும்
சமுத்திரத்தை கட்டியாளும்
சரித்திர தேவதைதான் பெண்