ஏவுகணை நாயகனுக்கு
சட்டைப்பையில்
ரோஜாப்பூ இல்லாத
இரண்டாம் நேரு நீ......
தலை நிறைய
முடி முளைத்த
இரண்டாம் காந்தி நீ.........
காவி உடைத்
தரியா
இரண்டாம் விவேகானந்தர் நீ.......
காமராஜரும் கக்கணும்
எளிமையின் சிகரமென்றனர்
ஏட்டினிலே.......
இவர்களின் மொத்த உருவாய்க்
கண்டோம் உன்னை
நேரினிலே.....
பொக்ரானில்
புத்தரை சிரிக்க வைத்து (Operation Smiling Buddha)
அந்நிய நாட்டை நம்மைப் பார்த்து
சலாமிட வைத்த
கலாம் நீ - எங்கள்
அப்துல் கலாம் நீ.......
உறக்கத்தில் வருவதல்ல கனவு
உங்களை
உறங்க விடாமல் செய்வதே கனவு
என்றாய்.....
மன்னித்து விடு - இனி
உறக்கத்திலும் கனவு காண்போம்.....
அக்கனவில்
நீ வருவாய் என.....
அறிவுரை பல
தருவாய் என........
இன்று
பேக்கரும்பில் விதையாய் நீ
விதைக்கப்பட்டிருக்கிறாய்...
விருட்சமாய்
நாங்கள் வளர்வோம்....
உன்
கனவுகளை நிறைவேற்ற !!!!!!!