தேர்தல் திருவிழா

தேர்தல் திருவிழா!

வருகிறது!வருகிறது!
வழக்கம்போலவே வருகிறது!
வருடங்கள் ஐந்துருண்டோடி
வருகிறது அடுத்த திருவிழா!
தட்டி போர்டுகள் வரவேற்க
தங்கம்மா ஆரத்தியெடுக்க
தங்கையா மாலைபோட
தங்கத்தலைவர் வர்றாரு!
களவாண்ட பணமெல்லாம்
கரச்சுக்கொட்டி இன்னும்
களவாண வாய்ப்பு தேடி
கலர்புல் வண்டியில் வர்றாரு!
குடிமகன்களுக்கு குவார்ட்டரும்
குடும்ப பெண்களுக்கு வேறுமென
விளம்பரமில்லா விநியோகம்!
இலவசங்களை அள்ளி வீசி
வாய்கூசாது வாக்குறுதிகளை
வாரித்தட்டி வர்றாரு!
அலங்கார வண்டிகளையும்
அதன்மேல் கொடிகளையும்
வேடிக்கை பார்த்து-ஜனம்
வேதனை களைந்து மகிழுது!
அம்மா,ஐயாவென
வாக்குப்பிச்சை வாங்கும்
தேர்தல் நாயகர்கள்
தெருவெல்லாம் இறங்கி
தேவைகளைத் தீர்ப்போமென
தேவையில்லா வாசகங்கள்!
கோடிகளைப் புரட்ட கொடிகள் உதவுது
கேடிகளை சேர்க்க பதவிகளுமாய்!
பட்டாசு,இனிப்புவெனவெல்லாம்
பலவித கொண்டாட்டங்கள்
பதவிவெறி கொண்டோரின்
பரிணாமங்களாக! - ஆம்
தேர்தல் திருவிழா - மக்கள்
தேவைகளைத் தீர்க்காத
தேவையில்லா விழாவாகவே!

எழுதியவர் : முள்ளை ஜோஸ் (31-Jul-15, 9:22 pm)
சேர்த்தது : முள்ளை ஜோஸ்
பார்வை : 154

மேலே