என்னவென்று உரைப்பேன்
என்னவென்று உரைப்பேன் இந்த
ஈனப் பிறவிகளின் பண்பை
மன்னவர் வானோர் போலே
வாய்க்கு வந்ததை எல்லாம்
தன்னுரை பொன்னுரை என்று
ஊடகம் அனைத்திலும் போட்டு
அன்னவர் ஆணை அதனால்
அகிலமே இயங்குதல் போல்
தன்னிகர் எவரும் இல்லா
காப்பியத் தலைவரைப் போல்
முன்னவர் எவரோ மொழிந்ததை
மானமோ அவமானோ இன்றி
அன்னது தன்னுரை ஆக
ஆர்ப்பாட்டம் செய்து ஒப்பித்து
பன்னிடும் தந்திரம் கண்டால்
நன்மயர் வாயும் அடைக்கும்.