புதுக்குறள்

அறிவினில் உயர்ந்தவர் பகைவரே ஆயினும்
அவதூறு சொல்வதைக் கொல்.

அளவற்ற பொருளுள்ளோர் எளியவர்க்கீ யாவிடில்
களவுக்குள் சேர்த்திடும் காலம்.

உள்ளத்தின் உறுதியும் உண்மையும் உழைப்பும்
உயர்த்திடும் உன்னை உலகில்.

வறுமையை விரட்டவே கடுமையாய் உழைப்போர்க்கு
வற்றாத செல்வங்கள் சேரும்

அன்பையே பொழிந்து ஆபத்தில் காத்திடும்
நண்பனை நாளும் நினை.

கேட்டதும் நன்மையைக் களிப்புடன் செய்வோரை
கேளிராய் உள்ளத்தில் கொள்

பயனெதிர் பார்க்காது பண்புடன் உதவுவோர்
செயலுக்கு ஈடிங்கு எது

உதவியோர் மனம்மாறி ஊறுகள் செய்யினும்
உதவியை எண்ணியே மற

புதிதாகப் பழகுகையில் பண்போடு பழகிடுவார்
போகப்போக பொல்லாங்கு செய்வர்

உற்றாரை தள்ளிவைத்து மற்றோர்க்கு உதவினால்
செற்றமாய் மாறிடும் உறவு.

எழுதியவர்
பாவலர். பாஸ்கரன்

எழுதியவர் : (9-Aug-15, 5:17 am)
Tanglish : puthukural
பார்வை : 102

மேலே