நாவினன் நாகரீகம்

..."" நாவி(ன)ன் நாகரீகம் ""...
உடம்பினில் எந்தவொரு
உறுப்புக்கும் கிடையாத
அற்புதமான உன்னதம்
உனக்கு மட்டுமேயுண்டு
உள்ளிலும் வெளியிலும்
லாவகமாய் உலாவரும்
நந்தவனமும் நீதான் ,,,
பிறர் உயிரை கொல்லும்
பேராயுதம் நீதான்
கட்டிலறை முத்தத்தில்
காமத்தின் உச்சத்தில்
உயிர் மூச்சும் நீதான்
முத்தான பாசத்தின்
முதல்வரியும் நீதான் ,,,
சுவைத்தே சுகம்கூட்டும்
உயிர் நாடியும் நீதான்
எலும்பில்லா சதையாய்
எழுந்தாடுவதும் நீதான்
உன்னாலிந்த உலகினில்
நாடாண்ட மன்னருமுண்டு
நாசமாய் போனோருமுண்டு ,,,
பார்வைக்கு சிறியவன்
தூண்டாது எறிந்திடும்
தீண்டாமல் தைத்திடும்
விஷம் தடவிய கத்தியாம்
நாவை அடக்கிவிட்டால்
நடந்திடும் நல்லவைகள்
நலமாக தடைகளின்றி ,,,
நிரந்தரமில்லா நிலைதானே
அழிந்துவிடும் உயிரிது
ஆணவம் எதற்க்கிங்கு
அன்பாய் பழகிடுவோம்
பாசத்தை பகிர்ந்திடுவோம்
பண்பை வளர்த்திடுவோம்
பார்போற்ற வாழ்ந்திடுவோம் ,,,
என்றும் உங்கள் அன்புடன் ,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்...