காலத்தை வென்ற கலாம்

[7:47PM, 11/08/2015] dhamayandhik: அலை மோதும் கடல் ஓரம் பிறந்து,
மலையென தடைகளை கடந்து,
விலையில்லா கல்வியில் உயர்ந்து,
விண்ணிலே பறவையாய் பறந்து,
இமயத்தை தாண்டி புகழ்பெற்று,
இதயத்தில் நீங்கா இடம் பெற்று,நாட்டை காக்கவந்த காந்தி.
அவர் ஆன்மா அடைந்தது சாந்தி.
காலம் கலாமை கவர்ந்து விட்டது.
கண்ணீரும் நிற்காமல் இமைதாண்டி கொட்டுது..
உலகமே வியர்ந்தது உன் அணுகுண்டு சோதனையில்..
இன்று மனம் தவிக்கிறது உனைபிரிந்த வேதனையில்..
மதங்களை தாண்டி நீ மனிதனாய் இருந்ததால்,
இனங்கள் பல இன்று இரங்கல் சொல்கிறது.
உன்னால் தான் படிக்க ஆசையே பிறந்தது.
உன் சொற்கள் குருதியில் நீர் என கலந்தது.
மனிதனாய் இருந்தாய்.
புனிதனாய் மறைந்தாய்.
உயிரிலே கலந்தாய்.
உடல் விட்டு பறந்தாய்.
நீ விதைத்த விதை நாளை விருட்சமாய் வளருமையா...
உன் கனவு நனவாகி வல்லரசாய் புலருமையா....

கு.தமயந்தி
[7:47PM, 11/08/2015] dhamayandhik: ஓயாத உழைப்பும் பால்மன சிரிப்பும்
உனது அடையாளம்..
மாணவர்களே உனக்கு நெருக்க மாணவர்கள்.
வல்லரசு இந்தியாவை காண,கரைகண்ட சொல்லரசரே,
நீ கொண்ட மத சகிப்பு எண்ணினாலே பெரும் வியப்பு.
எத்தனையோ பெரும் பொருப்பு நீ ஏற்றது தான் உயர் சிறப்பு.
கலாமே,
காலம் முழுவதும் நீ கல்வியையே காதலித்தாய்.
கனவுகளோடே கரம் கோர்த்தாய்.
வெற்றி விதைகளை உனை சுற்றி நீ விதைத்தாய்..
சுற்றும் பூமியில் சூரியனாய் நீ கிடைத்தாய்.
திட்டங்கள் வகுத்து நீ வென்றதால் பட்டங்கள் பல தேடி வந்தது.
அரிதான செயல்களை அறிவாலே முடித்தவரே,
அரிதாரம் பூசாமல் பிறை என முளைத்தவரே,
கரைபடியா தூயவனே,(நீ) கண்மூடி உறங்கிட, உறவினை இழந்ததாய் உலகமே கலங்கிட...
உனை இழந்து பாரதமே தவிப்பதை.பாராயோ..
மீண்டும் ஒரு கலாமாய் தோன்றி நீ வாராயோ...
கு.தமயந்தி.

எழுதியவர் : கு.தமயந்தி (11-Aug-15, 8:08 pm)
பார்வை : 257

மேலே