நாட்டுப்பற்று

......................................................................................................................................................................................

ஷப்னா...

காதலின் மற்றொரு பெயர்...!
இனிப்பால் ஆனவள்..!
இசையால் இழைத்தவள்..!
உயிரில் கலந்தவள்..
உறக்கம் பறித்தவள்..!

பரிதியும் புவியும் உறவாடினும்
பரிதி நிலத்தை அணைத்த தில்லை..
இதுவரை....!
மங்கல நாண் பூட்டிய இரவில் கேட்டான்..!

“ சுற்றி சுற்றி வருகிறாய்..!
வெண்துகளில் அபின் நிரப்பி நிலா
விருந்து பொழியும் வேளையில்...
இதழ் கொடுத்தாய்...! இதயம் எடுத்தாய்..!
ஏழை சிப்பாய் நான்...!
என்ன வேண்டும் அன்பே..???”

கணுக்காலைத் தழுவும் சிற்றோடை ..
பெருகிக் பெருகி
தலை முழுதும் விரவி
மூச்சுத் திணறடித்து மூழ்கடிப்பது போல்
பின்னிப் பிணைகிறாயே..!
ஏது கேள்..! ”

“அந்த ரகசியம்..வேண்டும்! ”

தாய் நாட்டின் ராணுவ ரகசியம்...!
அந்நிய உளவாளியோடு
ஆயிரம் கால பந்தம்...!

தந்தான்..

துப்பாக்கி முனையில் வலியில்லா மரணம்..!

எழுதியவர் : அருணை ஜெயசீலி (14-Aug-15, 6:32 pm)
பார்வை : 171

மேலே