சும்மா வருமா சுதந்திரம்
சுதந்திர தாகம் தணிந்து
ஆண்டுகள் பல சென்றும்
மக்கள் மனதில் அமைதி இல்லையே
திருப்தி இல்லையே
போராடும் எண்ணங்களும் தீராத வேட்கைகளும்
குறையவில்லையே
சுதந்திரம் பெற்றோம்
சுதந்திர தினம் கொண்டாடுகிறோம்
அதெல்லாம் சும்மா ஒப்புக்காக
ஒருவர் மனதிலாவது
சுதந்திரம் பெற்ற திருப்தி இருக்கிறதா
அந்நியன் ஆட்சிக் காலத்தில்
அகிம்சாவாதிகளாகி தியாகிகளாகி
சத்தியாக்கிரகங்களில் தம்மையே பணயம் வைத்து
இந்தியனே நீ அடிமை இல்லை
இந்தியா எனும் மாபெரும் தேசம் எமக்கு மட்டுமே
அன்னியனே வெளியேறு
எங்களுக்கு சுதந்திரம் வேண்டும்
இந்திய நாட்டை விட்டு சென்று விடு
எங்கள் நாட்டை நாங்கள் ஆண்டு கொள்வோம்
பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்து
அந்நியனை ஓட ஓட விரட்டினர் நம் மக்கள்
அன்று வாழ்ந்த நம் தலைவர்களின்
அடங்கா வேட்கை நம்மிடம் இல்லையே
அவர்கள் பெற்றுத் தந்த சுதந்திரத்தை
சுக்கு நூறாக்குவது போல் ஒவ்வொருவரும்
ஒவ்வொரு கொள்கைகள், கோட்பாடுகள்
மக்கள் எதற்கு/ எங்கே/ எப்படி/ தலையாட்டுவது
தெரியாமல் திகைக்கிறார்கள்
அன்று பெற்ற சுதந்திர மோகம் தாகம்
இம்மியளவும் இன்று இல்லையே
சுயநலம், சுயலாபம் தேடுகின்ற நாம் எல்லாம்
தேச பக்தர்களா /தேசத் துரோகிகளா
சிந்திக்க வேண்டிய நிலையில் நாம்
நாம் என்ன செய்தோம் நம் நாட்டிற்காக
சும்மா வருமா சுதந்திரம்/ சிந்தித்துப் பார்
அத்தனை தியாகங்களும்
நம் மனக் கண் முன்னே நிழலாடும்
அந்தத் தியாகங்களை நினைத்து
நாம் அடைந்து கொண்ட விடுதலையை
சுதந்திர தினமாகக் கொண்டாடு
சும்மா வருமா சுதந்திரம் /