சுதந்திரம் உணரு

என் தேசத்து உறவுகளுக்கு
என் இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் !

காலம் காலமாய் அழுது துடித்த
அடிமை வர்க்கங்களின் வீட்டில் சுதந்திர சுடர் -
எத்தனையோ புனிதர்களின்
தியாகத்தில் இன்றைக்கும் ஒளிர்விட்டு கொண்டிருக்கிறது
"சுதந்திரம் ".

தேசத்தை நாசமாக்கிய
துரோகிகள் தொலைந்த நாள்
இந்தியா இந்தியனுக்கு
சொந்தமான நாள் .

சுதந்திரம் வார்த்தையல்ல
வலிகளின் விடுதலை
எவ்வளவோ சித்திரவைதைகளுக்கு
முற்றுபுள்ளி .

சிந்திய ரத்தமும்
மடிந்த உயிர்களும்
மன்றாடி பெற்றுத்தந்ததே
"சுதந்திரம்"!

நம்மை நாமே ஆள்வதற்கு
முன்னெடுத்த போராட்டத்தின் வெற்றிக்கனி
" சுதந்திரம்"!

சர்வாதிகாரத்தின் முற்றுப்புள்ளி
சமத்துவத்தின் தேடுதல்
"சுதந்திரம்"!

சுதந்திரத்தை உணரு
சுதந்திரத்தை நுகரு
முன்னோர்களின் தியாகத்தை உணர்ந்து !

எழுதியவர் : வினாயகமுருகன் (15-Aug-15, 9:39 am)
பார்வை : 121

மேலே