ஊடல், காதலுக்கு இன்பம்

உம்மென் றிருப்பா ளிதழ்திகழ் வெண்ணகை
வம்பே னெனவே திரையுடுக்கும் – அம்மியில்
செம்மிள காயுடஞ் சேர்த்து அரைபடும்
நல்மிள காயெரி வாள்.

+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

’உம்’மென்று வாய்மூடி இருப்பாள்!
வாய் அதரங்களினுள் திகழும் வெண்பற்கள் (அல்லது அவை உகுக்கும் நகை),
நமக்கேன் வம்பு என்று உதட்டுத் திரையினுள்ளேயே அமைதியாக மறைந்திருக்கும்.
அம்மியில், சிவப்பு மிளகாயுடன் கருமிளகை சேர்த்து அரைக்க உண்டாகும்
காரத்தைப் போல, அவளது கோபமும் விளங்கும் :) :)

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
அன்புடன்,
சுந்தர் புருஷோத்தமன்.

எழுதியவர் : சுந்தரேசன் புருஷோத்தமன் (19-Aug-15, 2:56 pm)
பார்வை : 1132

மேலே