கனவு
கனவில் உன்னை போலவே
ஒருவர் என் விழி நோக்கியே
விரல் நீட்டவே பறிபோன மனதும்
அலைபாயுதே அசைபோடுதே
நினைவில் உன்னை காணவே
முயன்றும் தோற்று பல நேரமே
பிணக்கு கோபம் கொள்ளாமலே
பக்குவமான மனதும் எனை தேற்றுதே
சிலையில் உன் நளினம் காணவே
நிலவில் உன் தோற்றம் பார்க்கவே
இரவில் உன் ஸ்பரிசம் தேடியே
என் காதலுக்கும் மிக வயதானதே