நிலவின் வாழ்க்கை

அனைத்திலும் மாற்றம் உள்ளது
மாற்றம் இல்லாமல்
இந்த உலகில் யாருடைய
வாழ்க்கையும் இல்லை ........
ஆனால்
எந்தன் வாழ்க்கையில்
காலம் உள்ளவரை
மாற்றம் ஏதும் இல்லை.....
நான் என்றும்
செஞ்சோற்று கடனாளியாகவே
வாழ்கிறேன் இறைவா !
நான் யாசகம்
பெற்ற அன்பினை வைத்து
பொடி நடையாக
என் வானில்
உலா வருகிறேன்.....
ஆனால்
இரவில் மட்டுமே
எனது சேவை
எல்லாருக்கும் தெரியும் .....
ஆனால்
அல்லும் பகலும்
இடைவிடாது
நான் எப்போதும்
சேவை செய்து வருகிறேன் இறைவா !
ஆனால்
என் எந்த
ஜென்மத்து பாவம்
என்று நான்
எவ்வாறு அறிவேன் இறைவா !
சில நாள்
என்னை
முழு நிலவாகவும்
சில நாள்
என் மனதில் உள்ள
சோகங்களால்
நான் தேய்ந்து
வாழ்கிறேன் ....
ஆனால்
இதுவும் எனக்கு சுகம்
தான் இறைவா !
எனை பார்த்து
தாய் தன் மழலைக்கு
சாதம் ஊட்டுகிறாள் .....
என்னால் தான்
காதலர்களின் காதலும்
வளர்கிறது .....
என்னால் தான்
மின்மினி பூச்சிகளும்
தன் அழகை
தாரணிக்கு( உலகம் ) காட்டுகிறது
என்னால் கண்டு
தரணியும் ( சூரியன் )
காதல் கொள்கிறது .....
என்னால் தான்
தாரகையும்( விண்மீன் ) தாரணியும் ( உலகம் )
வாழ்கை வாழ்கிறது ....
இந்த மகிழ்ச்சி தந்த
இறைவனுக்கு
நான் அனுதினமும்
எண்ண முடியாத
விண்மீன் விளக்குகள் ஏற்றி
என் காலம் உள்ள வரை
என் நன்றியை
தெரிவிப்பேன் இறைவனுக்கு !