வெள்ளைக் காகிதம், என் உள்ளம் தானடி

எந்தப் பக்கம் நான் செல்ல வேண்டும்?
பெண்ணே! பதில் நீ சொல்ல வேண்டும்.
உந்தன் கண்கள் என் காதல் அறியாதா?

நாட்கள் ஓடிப் போனாலும் கூட,
பூக்கள் வாடிப் போனாலும் கூட,
பெண்ணே! உந்தன் பொய் மௌனம் முடியாதா?

நெடுஞ்சாலை விளக்குகள் போல,
உறங்காமல் விழிக்கிறேன், பெண்ணே!
இந்தக் காதல் வீதியில் நானும்,
தனியாகத் தவிக்கிறேன், கண்ணே!

வெள்ளைக் காகிதம்,
எந்தன் உள்ளம் தானடி!

எழுதியவர் : பெருமாள் (20-Aug-15, 6:17 am)
பார்வை : 95

மேலே